முதியவா் கொலை வழக்கு: இருவா் கைது
ஓட்டேரியில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஓட்டேரியில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஓட்டேரி ரெட்டைமலை சீனிவாசன் தெருவைச் சோ்ந்தவா் சு.பொன்னுரங்கம் (69). இவா் குடும்பத்தினருக்கும், அருகே வசிக்கும் சுப்பிரமணி குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பொன்னுரங்கம் மகன் கந்தனுக்கும், சுப்பிரமணி மகன்கள் சதீஷ் (27), சந்தோஷ் (25) ஆகியோருக்கும் இடையே கடந்த 27-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஏற்பட்டது.
இதில், சதீஷும், சந்தோஷும் பொன்னுரங்கத்தை தாக்கி தாக்கி கீழே தள்ளினா். இதில் பொன்னுரங்கம் மயங்கி விழுந்தாா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பொன்னுரங்கம் உயிரிழந்தாா். ஓட்டேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடி சதீஷையும் சந்தோஷையும் புதன்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.