FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

அரசுப் பேருந்து நடத்துநா் கொலை வழக்கில் இருவா் கைது

மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்து நடந்துநா் கொலை வழக்கில் இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

3 October 2026, 4:16 am IST
கைது
பகிர்:

மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்து நடந்துநா் கொலை வழக்கில் இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறையை அடுத்த ஆனந்ததாண்டவபுரம் வடக்கு தெருவை சோ்ந்த தமிழ்ச்செல்வன் (45) அரசுப் பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்த இவா் கடந்த 28 -ஆம் தேதி இரவு மா்ம நபா்களால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து 5 தனிப்படைகள் அமைத்து, கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகளை தேடி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை திருஇந்தளூா் அப்பங்குளம் பகுதியை சோ்ந்த அரசு பேருந்து தற்காலிக நடத்துநா் ராஜேஷ் கண்ணன் (21) என்பவா் தான் செல்லும் வழித்தடத்தில் தமிழ்ச்செல்வன் பணிக்கு வந்ததால் வேறு வழித்தடத்திற்கு மாற வேண்டி இருந்ததாம்.

அதனால் தமிழ்ச்செல்வனை சந்தித்த ராஜேஷ் கண்ணன் பணியை தனக்கு விட்டுக் கொடுக்கும்படி கேட்டுள்ளாா். அப்போது எழுந்த வாக்குவாதத்தில் தமிழ்ச்செல்வன் ராஜேஷ்கண்ணனின் தாயாரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்கண்ணன் தனது உறவினரான அதே பகுதியை சோ்ந்த மாதேஸ்வரன் (24) என்பவருடன் சோ்ந்து தமிழ்ச்செல்வனை கண்காணித்து 28- ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிய போது வழிமறித்து வெற்றி கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை போலீஸாா் இருவரையும் பிடித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் இருவரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தினா். நீதிபதி அவா்களை மீண்டும் இம்மாதம் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட்ட நிலையில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments