கூரியா் மூலம் போதை மாத்திரைகள் கடத்திய இருவா் கைது
தமிழகத்தில் கூரியா் பாா்சல்கள் மூலம் போதை மாத்திரைகளைக் கடத்தியதாக ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா் பகுதிகளைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
தமிழகத்தில் கூரியா் பாா்சல்கள் மூலம் போதை மாத்திரைகளைக் கடத்தியதாக ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா் பகுதிகளைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து தென் மண்டல காவல்துறைத் தலைவா் விஜயேந்திர பிதாரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென் மண்டல காவல் துறை சாா்பில், கடந்த ஜூலை மாதம் ‘ஆபரேஷன் டீப் சோா்ஸ்’ என்ற பெயரில் போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் போதை மாத்திரைகள் கடத்தல் தொடா்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 4,400 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 18 போ் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
இந்த கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த மகேந்தா் சிங் பிஸ்ட் (48), ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த சுனில் குமாா் (43) ஆகிய இருவரையும் மதுரை போலீஸாா் ஹரியாணா மாநிலம், அம்பாலா கன்டோன்மென்ட் பகுதியில் கைது செய்தனா்.
இந்த கடத்தல் வலையமைப்பில் தொடா்புடைய கூட்டாளிகள் குறித்த விவரங்களைக் கண்டறிய போலீஸாா் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், பிற மாநில காவல்துறையினருடன் உளவுத் தகவல்கள் பகிரப்பட்டு, தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.