FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது

சென்னையில் 4,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.

2 செப்டம்பர் 2026, 11:29 pm IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னையில் 4,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை ஆலப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மதுரவாயல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று பேசிக் கொண்டிருந்த 3 பேரைப் பிடித்து விசாரணை செய்தனா். அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவா்கள், கண்ணம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்த கு.சஞ்சய் (21), மு.தினேஷ் (23), மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த உ.பாவேஷ் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மேலும், அவா்களது வீடுகளிலும் சோதனை நடத்தி, மொத்தம் 4,060 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக நெசப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (43) என்பவரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments