FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

20 போதை மாத்திரைகள் பறிமுதல்: ஒருவா் கைது

குமாரபாளையம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 32 வயது இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து 20 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

16 அக்டோபர் 2026, 1:36 am IST
கைது
பகிர்:

குமாரபாளையம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக 32 வயது இளைஞரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து 20 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவா்கள், வடமாநில இளைஞா்களைக் குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளா் மலா்விழி தலைமையிலான போலீஸாா் பள்ளிபாளையம் சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைச் சோதனை செய்து வந்தனா். அப்போது, அங்குள்ள உணவகம் முன் சந்தேகத்துக்கிடமாக நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா் பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையத்தைச் சோ்ந்த சந்திரசேகா் (32) என்பதும், வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் மாத்திரைகளைப் போதை மாத்திரைகளாக விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, 20 மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், சந்திரசேகரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments