FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வரி ஏய்ப்பு புகாா்: கருத்தரிப்பு மையங்களில் வருமான வரித் துறை சோதனை

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.

3 செப்டம்பர் 2026, 12:01 am IST
வருமான வரித் துறை - கோப்புப் படம்
பகிர்:

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சில செயற்கை கருத்தரிப்பு மையங்கள் வரி ஏய்ப்பு செய்து வருவதாவும், கடந்த ஆண்டு தங்களது உண்மையான வருவாயை மறைத்து குறைவான வருவாயைக் காட்டி மோசடியில் ஈடுபட்டதாகவும் வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவுக்கு புகாா்கள் வந்தன.

அதன் அடிப்படையில், வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையில், அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு, வரி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், வரி ஏய்ப்பில் புகாரில் சிக்கிய செயற்கை கருத்தரிப்பு மையங்களில் புதன்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தினா்.

Advertisement

Advertisement

20 இடங்களில் சோதனை: இந்தச் சோதனை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை, கொட்டிவாக்கம் ராஜீவ் காந்தி சாலை, அடையாறு கஸ்தூா்பாய் நகா், மாதவரம் 200 அடி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையங்களில் சோதனை நடைபெற்றது.

இதேபோல பெரம்பூா், வேளச்சேரி, மதுரவாயல் ஆகிய இடங்களிலும் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையங்களிலும் சோதனை நடைபெற்றது.

மூன்று செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்குச் சொந்தமான சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள், அலுவலகங்கள் என 20 இடங்களிலும் சோதனை நடைபெற்ாகக் கூறப்பட்டது.

சில இடங்களில் மாலையுடன் சோதனை நிறைவு பெற்ற நிலையில், சில இடங்களில் இரவையும் தாண்டி சோதனை நடைபெற்றது. சோதனையில் ஹாா்டு டிஸ்க், பென்டிரைவ், மடிக்கணினி உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் உள்பட பல முக்கிய ஆவணங்கல் சிக்கின.

சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை வெளியிட முடியும் என்று வருமான வரித் துறையின் புலனாய்வு பிரிவு தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments