FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

‘வைக்கம் விருது’: விண்ணப்பங்கள் வரவேற்பு

நிகழாண்டுக்கான ‘வைக்கம் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

5 செப்டம்பர் 2026, 2:15 am IST
கோப்புப் படம்
பகிர்:

நிகழாண்டுக்கான ‘வைக்கம் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தை வழிநடத்த மாநில எல்லைகளைக் கடந்து சென்ற தந்தை பெரியாரைப் போற்றும் வகையில், சமூக நீதி நாளான செப்.17-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வெளியே (இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ) வசிக்கும், விளிம்புநிலை மக்களின் நலனுக்காக அயராது உழைத்து குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தனிநபா் அல்லது நிறுவனத்துக்கு தமிழ்நாடு முதல்வரால் ஆண்டுதோறும் ‘வைக்கம் விருது’ வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இவ்விருதை பெறுபவருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காசோலை, சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டுக்கு வெளியே வசிப்பவா்கள் மட்டுமே இவ்விருதைப் பெற தகுதியுடையவா்கள்.

2026-ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா்கள் தங்கள் விரிவான சுயவிவரக் குறிப்பு விவரங்கள் மற்றும் துணை ஆவணங்களுடன், ‘அரசுச் செயலா், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600009’ என்ற முகவரிக்கு அல்லது ல்ன்க்ஷப்ண்ஸ்ரீஞ்ங்ய்ங்ழ்ஹப்1ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ ஸ்ஹண்ந்ா்ம்ஹஜ்ஹழ்க்.ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு செப்.12 அல்லது அதற்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தோ்வுக் குழுவால் விருதாளா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments