FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டு சேலை யாருக்கெல்லாம் கிடைக்கும்? - தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெறுவதற்கு விண்ணப்பிக்கத் தேவையான முக்கிய ஆவணங்கள் குறித்து

19 அக்டோபர் 2026, 6:18 pm IST
அண்ணன் சீர் திட்டம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெறுவதற்கு விண்ணப்பிக்கத் தேவையான முக்கிய ஆவணங்கள் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழக அரசு, தாய்மாமன் தங்க மோதிரம் மற்றும் வெற்றிப் பயணம் ஆகிய இரண்டு திட்டங்களை அடுத்தடுத்து தொடங்கியது. இந்த நிலையில், அடுத்த கட்டமாக அண்ணன் சீர் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் திருமணமாகும் பெண்களுக்கு அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயத்துடன், ஒரு பட்டு சேலை வழங்குவதற்கான அரசாணையை அக்டோபர் 5 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.812 கோடி நிதியை அரசு ஒதுக்கியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பெண்கள், ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது அல்லது ஆதார் அங்கீகாரத்தை பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஆதார் எண் இல்லாத பெண்கள் தங்களுக்குரிய சலுகைகளைப் பெறுவதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பெண்களுக்கு அவர்களது திருமணத்தின்போது 22 காரட் தங்க மாணயம் 8 கிராம், ஒரு பட்டு சேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் சமூக நல இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இந்ததிட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள் தங்களிடம் ஆதார் எண் இருப்பதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகார நடைமுறையை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இல்லாத பெண்கள்...?

அதேநேரத்தில், ஆதார் எண் இல்லாதவர்கள் அல்லது இதுவரை ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்காதவர்கள் திட்டத்தில் பதிவு செய்வதற்கு முன்பாக, ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதார் பதிவு மையங்களை அணுகலாம்.

மேலும், ஆதார் பதிவு மையங்கள் அருகில் இல்லாததால் பெண்கள் ஆதார் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், அவர்களுக்கு வசதியான இடங்களில் ஆதார் பதிவு முகாம்ங்களை ஏற்படுத்தித் தருமாறு சம்மந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்த பெண்களுக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை, மாற்று அடையாள ஆவணங்களை சமர்ப்பித்து, இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஆதார் பதிவு அடையாளச் சீட்டு அல்லது பின்வரும் ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம். இந்த ஆவணங்களை சம்மந்தப்பட்ட துறையால் நியமிக்கப்பட்ட அலுவர்கள் சரிபார்ப்பர்.

மாற்று ஆவணங்கள்..?

* புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகம்

* நிரந்தர கணக்கு அட்டை(பான் அட்டை)

* கடவுச்சீட்டு

* குடும்ப அட்டை

* வாக்காளர் அடையாள அட்டை

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டை

* புகைப்படத்துடன் கூடிய கிசான் கணக்குப் புத்தகம்

* ஓட்டுநர் உரிமம்

* அரசு அலுவலர் அல்லது வட்டாசியர் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ்

* புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டை

மாற்று வசதிகள்...

கைரேகை தரம் குறைவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால், ஆதார் அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால், கருவிழிப் பதிவு அல்லது முக அங்கீகாரம் மூலம் சரிபார்க்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த வழிகளிலும் அங்கீகாரம் பெறமுடியாத சூழலில், ஆதார் கடிதத்தில் உள்ள விரைவு பதிலளிப்பு குறியீட்டை(க்யூஆர்) சரிபார்த்து, அதனடிப்படையில் திட்டப் பயன்களை வழங்கலாம். இதற்கான வசதிகளையும் சம்மந்தப்பட்ட துறை ஏற்படுத்த வேண்டும். மேற்கண்ட அனைத்து நடைமுறைகளும் தோல்வியடைந்தால், மத்திய அரசின் விதிவிலக்கு கையாளுதல் வழிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணன் சீர் திட்டம் தமிழகத்தில் உள்ள எண்ணற்ற ஏழைப் பெண்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்பதால், இந்த திட்டத்திற்கான வரவேற்பு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக அமலில் இருந்து தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களின் கல்வித் தகுதியை வைத்து தங்கம் வழங்கப்பட்டது. ஆனால் அண்ணன் சீர் திட்டத்தில் ஆண்டு வருமான ரூ.2.5 லட்சத்துக்குள் இருந்தால் மட்டுமே பயன்பெற முடியும். கல்வித் தகுதி குறிந்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

Annan Seer Scheme: Who will get 8 grams of gold and a silk saree?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments