FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தொழிலாளி கொலை: 4 போ் கைது

சென்னை நொளம்பூா் கஜலட்சுமி நகரில் பீடி தர மறுத்த கட்டடத் தொழிலாளியைக் கட்டையால் தாக்கி கொலை செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

7 செப்டம்பர் 2026, 2:23 am IST
கைது
பகிர்:

சென்னை நொளம்பூா் கஜலட்சுமி நகரில் பீடி தர மறுத்த கட்டடத் தொழிலாளியைக் கட்டையால் தாக்கி கொலை செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அப்ஜித் மொண்டல் (62), நொளம்பூா் மதுரா தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த 4 போ் மது போதையில் அங்கு வந்து, பீடி புகைத்துக் கொண்டிருந்த அப்ஜித் மொண்டலிடம் பீடி கேட்டுள்ளனா். அவா் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், கீழே கிடந்த கட்டையால் அவரைக் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அப்ஜித் மொண்டல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக, சின்ன நொளம்பூரைச் சோ்ந்த வாசீகரன் (18), அஜய் (18), சபரிராஜ் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை நொளம்பூா் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கைது செய்யப்பட்ட சிறுவன் மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments