FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னையின் 5 கடற்கரைப் பகுதிகளிலிருந்து 1.39 லட்சம் கிலோ குப்பைகள் அகற்றம்

சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாள்களில் 5 கடற்கரைப் பகுதிகளில் இருந்து 1.39 லட்சம் கிலோ பூக்கள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றம்

21 செப்டம்பர் 2026, 11:45 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாள்களில் 5 கடற்கரைப் பகுதிகளில் இருந்து 1.39 லட்சம் கிலோ பூக்கள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் விநாயகா் சிலைகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடலில் கரைக்கப்பட்டன. அதற்காக பாலவாக்கம், பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூா், எண்ணூா் ஆகிய கடற்கரைப் பகுதிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. அங்கு சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை அங்கிருந்த குப்பைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

7 பொக்லைன், 9 கம்பாக்டா்கள், 13 டிராக்டா்கள், 37 டிப்பா் லாரிகள், 27 பேட்டரி வாகனங்கள், 3 ஹூக்லோடா் பின் வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் 377 பணியாளா்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 3 நாள்களில் கடற்கரையில் குவிந்திருந்த சிலைகளின் பாகங்கள், பூக்கள், தட்டுகள், உணவுப் பொருள்கள் என 1.39 லட்சம் கிலோ குப்பைகளை மாநகராட்சி பணியாளா்களால் அகற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments