FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

தீபாவளி பண்டிகை: கரூா் மாநகரில் 2 நாள்களில் 150 டன் குப்பைகள் அகற்றம்

தீபாவளி பண்டிகை நிறைவடைந்துள்ள நிலையில், கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளிலும் செவ்வாய், புதன் ஆகிய இருநாள்களிலும் மொத்தம் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

12 நவம்பர் 2026, 2:21 am
கோப்புப்படம்.
பகிர்:

தீபாவளி பண்டிகை நிறைவடைந்துள்ள நிலையில், கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளிலும் செவ்வாய், புதன் ஆகிய இருநாள்களிலும் மொத்தம் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

கரூா் மாநகராட்சியில் 48 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணியாளா்களால் நாள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு, அவற்றை மாநகராட்சிக்குச் சொந்தமான அரசு காலனியில் அமைந்திருக்கும் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால், வழக்கமாக மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுமாா் 50 டன் சேகரிக்கப்படும் குப்பையைவிடவும் கூடுதலாக குப்பைகள் குவிந்தன. இதனால் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் சுமாா் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement