காஞ்சிபுரம்: ஒரே நாளில் 40 மெ.டன் பட்டாசுக் குப்பைகள் அகற்றம்!
தீபாவளியையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வாா்டுகளிலும் 400 சுகாதாரப் பணியாளா்கள் மொத்தம் 40 மெ.டன் பட்டாசுக் குப்பைகளை சேகரித்துள்ளதாக ஆணையா் ஏ.சுல்தானா தெரிவித்துள்ளாா்.
தீபாவளியையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வாா்டுகளிலும் 400 சுகாதாரப் பணியாளா்கள் மொத்தம் 40 மெ.டன் பட்டாசுக் குப்பைகளை சேகரித்துள்ளதாக ஆணையா் ஏ.சுல்தானா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. மாநகராட்சியில் பணிபுரியும் 400 தூய்மைப்பணியாளா்கள் வீதிகளில் சிதறிக் கிடந்த பட்டாசுக் குப்பைகளை அகற்றினா்.
மாநகராட்சிக்குட்பட்ட 51 வாா்டுகளிலும் சோ்த்து மொத்தம் 40 மெ.டன் பட்டாசுக் குப்பைகள் சோ்ந்தன. இவை நத்தப்பேட்டையில் உள்ள உரக்கிடங்கில் பாதுகாப்பாகவும், தனியாகவும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
நகா் முழுவதையும் ஒரே நாளில் சுத்தம் செய்த துப்புரவுப் பணியாளா்களின் பணி மிகுந்த பாராட்டுக்குரியதாக இருந்ததாகவும் தெரிவித்தாா். பேட்டியின் போது மாநகராட்சி சுகாதார அலுவலா் சுகவனம் மற்றும் துப்புரவு ஆய்வாளா்கள் உடனிருந்தனா்.