FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீபாவளி பட்டாசுக் குப்பைகளை அகற்ற களமிறங்கிய இடதுசாரி இயக்க இளைஞர்கள்!

ஈரோட்டில் மக்களின் கவனத்தை ஈர்த்த இடதுசாரி இயக்க இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தீபாவளி பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணி குறித்து...

ஈரோடு மாநகரில் தீபாவளி பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இடதுசாரி இயக்க இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் - டிஎன்எஸ்
பகிர்:

ஈரோடு: ஈரோடு மாநகரில் தீபாவளி பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணியில் இடதுசாரி இயக்க இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

ஈரோட்டில்‌ தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை தொடர்ந்து சாக்கடை அடைப்பை தடுக்கவும் தூய்மைப் பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்கவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் முயற்சியில் திங்கள்கிழமை காலை ஈடுபட்டனர்.

தீபாவளி பட்டாசுக் குப்பைகளை அகற்றும் பணியில் இடதுசாரி இயக்க இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்

ஈரோட்டில் தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசுகளை வெடித்து விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பண்டிகைக்கு மறுநாளான திங்கள்கிழமை மாநகரின் பல்வேறு வீதிகள் மற்றும் சாலைகளில் பட்டாசுக் கழிவுகள் அதிகளவில் குவிந்து காணப்படுகின்றன.

இடதுசாரி இயக்க இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்

இந்த கழிவுகள் சாக்கடைகளில் சேர்ந்து அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

இளைஞர்களின் இந்த செயலை மக்கள் ஏராளமானோர் பாராட்டினர்.

Youth from leftist movements step in to clear up Diwali firecracker debris!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.