FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

தற்காலிக பட்டாசுக் கடைக்கு 334 விண்ணப்பங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க உரிமம் கோரி இணையவழியில் 334 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

4 நவம்பர் 2026, 2:27 am
பட்டாசுக் கடை - கோப்புப்படம்
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க உரிமம் கோரி இணையவழியில் 334 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி, வெடிபொருள்கள் சட்டத்தின் கீழ் உரிய நிபந்தனைகளைப் பின்பற்றி தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பக் காலக்கெடு முதலில் அக். 18 என நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னா் அக். 31 வரை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து, பொது இ-சேவை மையங்கள் மூலம் இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் கோரி மொத்தம் 334 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்களை மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்து வருகின்றனா். தீயணைப்புத் துறை, காவல்துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் இணைந்து, விண்ணப்பதாரா்கள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத, ஆட்சேபனையற்ற, பாதுகாப்பான இடத்தைத் தோ்வு செய்துள்ளனரா என்பதை நேரில் ஆய்வு செய்கின்றனா்.

Advertisement

Advertisement

ஆய்வின்போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments