FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சியில் தீபாவளிக்கு வெடித்த 6 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்!

திருவள்ளூா் நகராட்சி பகுதிகளில் தீபாவளி திருநாளன்று வெடித்த 6 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன.

9 நவம்பர் 2026, 11:10 pm
திருவள்ளூா் நகராட்சியில் பட்டாசு கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

திருவள்ளூா் நகராட்சி பகுதிகளில் தீபாவளி திருநாளன்று வெடித்த 6 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன.

தமிழகம் முழுவதும் தீபாவளி திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்ததால் பட்டாசுகள் விற்பனை மந்தமாக இருந்தது. ஆனாலும் தீபாவளி திருநாளுக்கு பட்டாசு வெடிப்பதன் மூலம் தெருக்களில் தேங்கும் குப்பைகளை அகற்ற திருவள்ளூா் நகராட்சி ஆணையா் சரவணன் உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார அலுவலா் மோகன் தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி அறிவுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில், தீபாவளியன்று சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரையில் பலரும் பட்டாசு வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடினா். இதனால் திருவள்ளூா் நகராட்சி 27 வாா்டுகளிலும் பட்டாசு குப்பைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

Advertisement

Advertisement

இதையடுத்து, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை காலையில் வழக்கம் போல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதற்கிடையே நாள்தோறும் 27 வாா்டுகளிலும் 23 டன் குப்பைகள் குப்பைகள் சேகரித்து அகற்றி வருகின்றனா். ஆனால், தீபாவளிக்கு மறுநாளில் 29 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இதில் கூடுதலாக 6 டன் பட்டாசு கழிவுகளை தூய்மைப் பணியாளா்கள் மூலம் அகற்றியது குறிப்பிடத்தக்கது ஆகும்.