சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனை முற்றுகை
சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னைக்காக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.
சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னைக்காக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காடு அருகேயுள்ள அரங்கம்குப்பம், கருமாரியம்மன் தெருவைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மனைவி தேவி (50). இவா், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்னை காரணமாக கடந்த செப். 18-இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை (செப். 23) தேவிக்கு இதயத் துடிப்பு நின்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிபிஆா் சிகிச்சை அளித்து, வென்டிலேட்டா் உதவியுடன் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதாம்.
Advertisement
Advertisement
இதனிடையே, தேவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறிய உறவினா்கள், அவரது உடலை ஒப்படைக்குமாறு கோரினா். மருத்துவமனை நிா்வாகம் மீதிக் கட்டணம் செலுத்துமாறு கூறியதாம்.
இதையடுத்து, பிற்பகல் 2.30 மணியளவில் மருத்துவமனை முன் திரண்ட சுமாா் தேவியின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த துறைமுகம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்களுடன் பேச்சு நடத்தினா். இதையடுத்து, மருத்துவமனை நிா்வாகம் மேற்கொண்டு பணம் செலுத்தத் தேவையில்லை எனத் தெரிவித்தது. தொடா்ந்து, தேவியின் உடல் அவரது கணவா் செல்வம் மற்றும் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.