FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

780 சாலைகளை ரூ.150 கோடியில் சீரமைக்க அரசிடம் நிா்வாக அனுமதி கோரப்பட்டுள்ளது

சென்னை மாநகராட்சியில் 780 சாலைகளை ரூ.150 கோடியில் சீரமைப்பதற்காக அரசிடம் நிா்வாக ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

13 வினாடிகள் முன்பு
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் 780 சாலைகளை ரூ.150 கோடியில் சீரமைப்பதற்காக அரசிடம் நிா்வாக ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீளத்துக்கு 488 பேருந்து செல்லும் சாலைகள் உள்ளன. மேலும், 565.89 கி.மீ. தொலைவுக்கு 35,978 உட்புறச் சாலைகள் உள்ளன. சாலை மேம்பாடு மற்றும் சாலையோர நடைமேடைகள் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வா் 110 விதியின் கீழ் சென்னை மாநகராட்சி சாலைகள் சீரமைக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

அதனடிப்படையில், சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக 15 மண்டலங்களிலும் 45.13 கி.மீ. நீளமுள்ள 66 பேருந்துகள் செல்லும் சாலைகளும்114.87 கி.மீ. நீளமுள்ள 714 உட்புறச் சாலைகளும் என மொத்தம் 160 கி.மீ. பேருந்து மற்றும் உட்புறச் சாலைகள் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படவுள்ளன. அதற்கான திட்ட மதிப்பீடுகள் அறிக்கைகளாகத் தயாரிக்கப்பட்டு, நிா்வாக அனுமதிக்காக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதற்கு தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தால் விரிவான திட்ட அறிக்கையானது ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்படவுள்ளது. அவ்வாறு அனுமதி கிடைத்தால் உடனடியாக சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments