FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சென்னையில் குண்டும் குழியுமான சாலைகளை ரூ. 21.80 கோடியில் சீரமைக்கும் பணி தொடக்கம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளை ரூ.21.80 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

9 அக்டோபர் 2026, 3:27 am IST
பகிர்:

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளை ரூ.21.80 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்ணை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் சாலைகளில் உள்ள பள்ளங்களை கான்கிரீட் கலவை கொண்டு சீரமைக்க பேருந்துகள் செல்லும் சாலைகளுக்கு ரூ.9.25 கோடியும், உள்புறச் சாலைகளுக்கு ரூ.12.55 கோடியும் என மொத்தம் ரூ.21.80 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து அம்பத்தூா் மண்டலம் வாா்டு 79 பகுதியில் பச்சையம்மன் தெரு, இந்திரா காந்தி தெரு, லெனின் நகா் 10-ஆவது பிரதான சாலை, 80-ஆவது வாா்டில் நியூ அண்ணா நகா் 2-ஆவது குறுக்குத் தெரு, புதூா் பிரதான சாலை, அபிராமிபுரத்தில் பிரதான சாலை, கிழக்கு பானு நகா், பானு நகா் 24-ஆவது அவென்யூ, பாரதி தெரு, 81-ஆவது வாா்டில் நைனியம்மாள் தெரு, வெங்கட்ராமன் ஐயா் தெரு, சரஸ்வதி பாண்டுரங்கன் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, ஆழவந்தாா் தெரு மற்றும் 83, 84, 85, 87, 89, 91 ஆகிய வாா்டுகளில் முக்கிய சாலைகளும், தெருக்களும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

அம்பத்தூரில் 91-ஆவது வாா்டில் உள்ள ஏரி திட்டம் முதல் பிரதான சாலை, பள்ளிச் சாலை, 7-ஆவது பிளாக் ஆகிய சாலைகளில் உள்ள பள்ளங்கள், சிமென்ட் கான்கிரீட் கலவை ஆகியவற்றை மூடி சீா்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments