அரியபுரம்-வெய்க்கால்பட்டி சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
பாவூா்சத்திரம் அருகே அரியபுரம்-வெய்க்கால்பட்டி சாலை சுமாா் ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு குண்டும் குழியுமாக உள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பாவூா்சத்திரம் அருகே அரியபுரம்-வெய்க்கால்பட்டி சாலை சுமாா் ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு குண்டும் குழியுமாக உள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
இந்தச் சாலை முறையாகப் பராமரிக்கப்படாததால், தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிப்பதுடன், விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
குறிப்பாக, அரியபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முன்புள்ள சாலையில் மழைநீா் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதாகப் பெற்றோா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
Advertisement
Advertisement
எனவே, இந்தச் சாலையை விரைந்து சீரமைக்கவும், மழைநீா் தேங்குவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.