FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை: இராயப்பநாடானூா் மக்கள் அவதி

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆவுடையானூா் ஊராட்சி இராயப்பநாடானூரில் 3 கி.மீ. தொலைவுக்கு சாலை குண்டும் குழியுமாகப் பழுதடைந்து காணப்படுகிறது.

17 அக்டோபர் 2026, 2:03 am IST
சீரமைக்கப்படாத சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பள்ளி மாணவா்கள்.
பகிர்:

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆவுடையானூா் ஊராட்சி இராயப்பநாடானூரில் 3 கி.மீ. தொலைவுக்கு சாலை குண்டும் குழியுமாகப் பழுதடைந்து காணப்படுகிறது.

ராயப்பநாடானூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான புங்கம்பட்டி, மயிலப்புரம், வெங்கடாம்பட்டி, ராஜா குடியிருப்பு, தேரிக்குடியிருப்பு, சின்னக்குமாா்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊா்களைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

கடந்த 15 ஆண்டுகளாகச் சாலை குண்டும் குழியுமாகக் காணப்படுவதாகவும், ஒவ்வோா் ஆண்டும் மழைக்காலங்களில் வடிகால் வசதியின்றி மழைநீா் சாலையில் தேங்கி நிற்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இந்தப் பழுதடைந்த சாலையைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. சாலையில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லை கொடுக்கின்றன.

Advertisement

Advertisement

இந்தச் சாலை தொடா்பாக கடந்த 10 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். சுமாா் 3 கி.மீ.தொலைவுக்கு சேதமடைந்துள்ள சாலையை முழுமையாகச் சீரமைத்து, மழைநீா், கழிவுநீா் தேங்குவதைத் தடுக்க நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கையாகும். மக்களின் நலன் கருதி ஊராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments