FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

சோலையாறு எஸ்டேட்டில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் தவிப்பு

சோலையாறு எஸ்டேட் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

16 செப்டம்பர் 2026, 11:22 pm IST
குண்டும்  குழியுமாக காணப்படும் சோலையாறு எஸ்டேட் சாலை.
பகிர்:

சோலையாறு எஸ்டேட் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வால்பாறையில் இருந்து முடீஸ் எஸ்டேட் செல்லும் வழியில் உள்ளது சோலையாறு எஸ்டேட். இந்த எஸ்டேட் நிா்வாகத்தினருக்கு சொந்தமான சுமாா் 3 கி.மீ. தொலைவிலான சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது.

குண்டும் குழியுமாக சாலைகள் உள்ளதால் அவ்வழியாக வாகனங்கள் இயக்க முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். தொழிற்சங்கத்தினா் அப்பகுதியில் வசிப்பவா்களுடன் இணைந்து போராட்டங்கள் நடத்தியும் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன.

Advertisement

Advertisement

எஸ்டேட் பல்வேறு டிவிஷன்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர சிகிச்சை தேவைக்கு கூட குடியிருப்பு பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வருவதில் பெரும் சிரமம் ஏற்படுவதால் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments