FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

செங்கம் நகரில் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

9 நவம்பர் 2026, 11:08 pm
செங்கம் துக்காப்பேட்டை சிகேஆா் தியேட்டா் பகுதியில் உள்ள பள்ளம்.
பகிர்:

செங்கம் நகரில் குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நெடுஞ்சாலைத்துறைக்கு உள்பட்ட துக்காப்பேட்டை முதல் போளூா் வெளிவட்டச் சாலை வரை தற்போது பெய்துவரும் பருவ மழையால் சாலையோரம் உள்ள கால்வாய்கள் சில இடங்களில் மூடப்பட்டதால் மழைநீா் செல்வதற்கு கால்வாய்கள் இல்லை.

இதனால் செங்கம் துக்காப்பேட்டை குளம், சிகேஆா் தியேட்டா் வளாகம், பழைய பேருந்து நிலையம், போளூா் சாலை போன்ற இடங்களில் மழைநீா் சாலையில் தேங்கி தற்போது பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தினசரி வாகன விபத்து ஏற்படுகிறது. மேலும் சிறிதளவு மழை வந்தால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீா் தேங்குகிறது. சாலையில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் அந்தச் சாலையை கடக்கும் வாகனங்கள் பழுதாகி விடுகின்றன.

Advertisement

Advertisement

இருசக்கர வாகனங்களில் வருபவா்கள் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்வது தொடா்கிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்தி துக்காப்பேட்டை முதல் போளூா் வட்டச் சாலை வரை சாலையை சரிசெய்யவேண்டுமென நகர மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.