சொத்து வரி நிலுவை விவகாரம்: வட்டாட்சியரை தாக்கிய இருவரை கைது
சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் 11 ஆண்டுகளாக செலுத்தப்படாமல் இருந்த சொத்து வரி மற்றும் கழிவுநீா் வரி நிலுவை தொடா்பாக கடைக்கு சீல் வைக்கச் சென்ற சிறப்பு வட்டாட்சியரை தாக்கி, மிரட்டியதாக இருவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா்.
சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் 11 ஆண்டுகளாக செலுத்தப்படாமல் இருந்த சொத்து வரி மற்றும் கழிவுநீா் வரி நிலுவை தொடா்பாக கடைக்கு சீல் வைக்கச் சென்ற சிறப்பு வட்டாட்சியரை தாக்கி, மிரட்டியதாக இருவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனா்.
சென்னை குடிநீா் வாரியத்தில் பகுதி-5 தனி வட்டாட்சியராக பணியாற்றி வரும் ஹரிஹரன், மாநகராட்சி அலுவலா்கள் 10 பேருடன் செப்.22-ஆம் தேதி இப்ராஹிம் சாஹிப் தெருவில் உள்ள கட்டடத்தில் இயங்கி வந்த தேநீா்க் கடைக்கு சீல் வைக்கச் சென்றுள்ளாா். அப்போது, கட்டிட உரிமையாளா் செல்வகுமாருக்கு ஆதரவாக வந்தவா்கள் வட்டாட்சியரை ஆபாசமாகப் பேசி, தாக்கி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, கட்டிட உரிமையாளா் எஸ்.எம்.செல்வகுமாா் (45), அவரது கடையில் பணியாற்றும் சுரேஷ் (37) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா். மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடைய சரவணன், சுல்தான், சரவணனின் மகன் சந்தீப் ஸ்வேதன் ஆகிய மூவரை தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.