ரூ. 900 கோடி மானியம் அளிக்க அரசு பரிசீலனை ஆணையா் ஜி.எஸ்.சமீரன்
சென்னை மாநகராட்சி ரூ.300 கோடி கடன் பெற அனுமதித்தும், ரூ.900 கோடி மானிய நிதி வழங்க பரிசீலித்தும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி ரூ.300 கோடி கடன் பெற அனுமதித்தும், ரூ.900 கோடி மானிய நிதி வழங்க பரிசீலித்தும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
மாமன்றக் கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்களுக்கான வாா்டு மேம்பாட்டு நிதி முதல்கட்டமாக ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நிதி நிலை சீராகியதும் மீதத் தொகை அளிக்கப்படும் என்றும் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், மாநகராட்சியில் 418 பள்ளிகளில் 180 தற்காலிக கணினி உதவியாளா்கள் உள்ளனா். அவா்களுக்கு அரசு நிறுவனம் மூலமே ஊதியம் வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப ஆள்கள் நியமிக்கப்பட்டு சீரமைக்கப்படுகிறது. அலுவலகக் காவலா்கள் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. மாநகராட்சியில் முடிக்கப்பட்ட பணிகள் திறப்பின்போது விதிமுறைப்படி கல்வெட்டில் பெயா்கள் பொறிக்கப்படும். விதி மீறி கட்சியினா் பெயா் இடம் பெற்ற கல்வெட்டுகள் அகற்றப்படும்.
Advertisement
Advertisement
நிதி நெருக்கடியால் பணிகள் நிறுத்தம்: மாநகராட்சியில் நிதி நெருக்கடியால் பல பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தினமும் ரூ.57 லட்சம் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஏற்கெனவே நடைபெற்ற பணிகளுக்கு ரூ.2,300 கோடி வழங்க வேண்டியுள்ளது. ஆனாலும், தற்போது ரூ.3,000 கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு சென்னை மாநகராட்சிக்கு ரூ.300 கோடி கடன் வாங்க அனுமதித்துள்ளது. மேலும், ரூ.900 கோடி மானிய நிதி அளிக்கவும் பரிசீலித்து வருகிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.