"குற்றவாளிகளை பொதுமக்களும் பிடித்து ஒப்படைக்கலாம்'
போலீஸார்- பொதுமக்கள் நல்லுறவுக் குழு ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை
போலீஸார்- பொதுமக்கள் நல்லுறவுக் குழு ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர காவல் ஆய்வாளர் சரவணன் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வமூர்த்தி, அதிமுக மாவட்டச் செயலாளர் உத்திரகுமார், நடைபயிற்சியாளர்கள் சங்க நிர்வாகி வெங்கடேசன், நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சும்த்குமார், பிண்து, ஹரிஷ், இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சி.ஆர்.ராஜா, இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டன், சிவசேனை நிர்வாகி மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கூட்டத்தில், காவல் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்.
அப்போதுதான் குற்றச் செயல்களைத் தடுக்கவும், குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் பிடிப்பதற்கும், குற்றங்களைக் கலைவதற்கும் ஏதுவாக இருக்கும்.
குற்றவாளிகளை அடையாளம் கண்டு பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பிடித்துக் கொடுத்தாலும், அதுவும் காவல் துறை கைது செய்ததாகத் தான் அர்த்தம். அதனால், காவல் துறையுடன் பொதுமக்கள் நண்பர்களாகப் பழகி, நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுமக்களும், காவல் துறையும் இணைந்து செயல்பட்டால் 100 சதவீதம் குற்றங்களைத் தடுக்கலாம்.
மேலும், அப்போதுதான் குற்றவாளிகளும் பொதுமக்களைக் கண்டு அச்சமடைவர் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல், செங்கல்பட்டு கிராமிய காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் தாமோதரன் உள்ளிட்ட போலீஸார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பொதுமக்கள், ஊராட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஓட்டேரி டிஎஸ்பி முகிலன் தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் ஓட்டேரி ராஜாங்கம், கூடுவாஞ்சேரி நாகலிங்கம், மறைமலைநகர் இளங்கோவன், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.