226 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி அளிப்பு
காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் விலையில்லா மடிக்கணினிகளை சனிக்கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் விலையில்லா மடிக்கணினிகளை சனிக்கிழமை வழங்கினார்.
தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா, காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம் தலைமை வகித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் வே.க. சண்முகம் கலந்து கொண்டு 226 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல், உத்தரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், வருவாய்க் கோட்டாட்சியர் சிவருத்ரய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.