78,000 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை 47 ஆயிரத்து 423 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகையாக மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2,277 பேருக்கு ரூ. 61.75 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் திட்டத்தில் 189 பேருக்கு 50.87 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் மானியமாக 43 பேருக்கு ரூ. 3.71 லட்சம், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 100 பேருக்கு இருசக்கர வாகனங்கள் ரூ. 48 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் 195 பேருக்கு ரூ.7.80 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்ற 35 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.9.50 லட்சம் வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகை அட்டைகள் 5,380 பேருக்கு ரூ. 28.40 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
பிரதமரின் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 4 பேருக்கு ரூ. 87 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது. 240 பேருக்கு ரூ.9.60 லட்சம் மதிப்பீட்டில் 3 சக்கர நாற்காலியும், 299 பேருக்கு பிரெய்லி கடிகாரமும், 939 பேருக்கு ரூ.2.06 லட்சம் மதிப்பீட்டில் மடக்கு குச்சி, கருப்பு கண் கண்ணாடியும், 395 பேருக்கு ரூ.96,775 மதிப்பீட்டில் தோள்பட்டை தாங்கியும், 62 பேருக்கு ரூ. 93 ஆயிரம் மதிப்பீட்டில் கால்தாங்கியும், 380 பேருக்கு ரூ. 4.1 லட்சம் மதிப்பீட்டில் காதொலிக் கருவியும், வழங்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு முறையாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.