FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குடிநீர் தட்டுப்பாடு: கிராமத்தினர் சாலை மறியல்

குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக மேல்தூளி கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 ஜனவரி 2024, 9:56 pm
சாலை மறியலில் ஈடுபட்ட மேல்தூளி கிராமத்தினர்.
பகிர்:


குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக மேல்தூளி கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகில் மேல்தூளி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிணறு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடந்த ஒரு வாரமாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக கிராமத்தினர் உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், அதிருப்தியடைந்த கிராமத்தினர் மேல்தூளி உத்தரமேரூர் சாலைக்கு காலிக் குடங்களுடன் சென்றனர். அங்கு, அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இது தொடர்பான தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், போலீஸார் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் குடிநீர் வழங்குவதற்காக புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படும். தற்போது குடிநீர் பற்றாக்குறையினை போக்க வழிவகை செய்யப்படும். அதன்படி, அருகிலிருக்கும் கிராமப் பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என உறுதியளித்தார். அதன்பேரில், கிராமவாசிகள் கலைந்து சென்றனர். முன்னதாக, மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments