FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரிமா சங்கம் சார்பில் கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள்

மாமல்லபுரம் கடலலைகள் அரிமா சங்கம் மற்றும் லியோ சங்கம் சார்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நிம்பூர் கிராம மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பும் நிகழ்ச்சி வியாழக்கி

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:


மாமல்லபுரம் கடலலைகள் அரிமா சங்கம் மற்றும் லியோ சங்கம் சார்பில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நிம்பூர் கிராம மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ரூ. 1 லட்சம் மதிப்பிலான துணிமணிகள், பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் உணவுப் பொருள்கள் தனி வாகனத்தில் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாமல்லபுரம் கடலலைகள் அரிமா சங்கத் தலைவர் லயன் இ.கே.துரைராஜ் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.விஜயகுமார், மாவட்டத் தலைவர் ஏ.எச்.அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கப் பொருளாளர் பி.தகலாராம் வரவேற்றார். நிவாரணப் பொருள்கள் அடங்கிய தனி வாகனம் கேரளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்டத் தலைவர் சம்சுல் அமீது, நிர்வாகிகள் ராஜ், விக்டர், வெங்கடேசன், பூபேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments