காயங்களுடன் இளைஞரின் சடலம் கண்டெடுப்பு
அண்மையில் காணாமல் போன பொறியியல் பட்டதாரியின் சடலம், மாமல்லபுரம் வெண்ணை உருண்டை மலைக் குன்றில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
அண்மையில் காணாமல் போன பொறியியல் பட்டதாரியின் சடலம், மாமல்லபுரம் வெண்ணை உருண்டை மலைக் குன்றில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
வடக்கு மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த நந்தகோபி என்பவரின் மகன் ஆனந்தகுமார் (23). பொறியியல் படிப்பு முடித்த பட்டதாரியான அவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டுச் சென்றார். அதன் பின் அவரைக் காணவில்லை.
இந்நிலையில், மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை மலைக்குன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில், மலைக்குன்றில் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டது காணாமல் போயிருந்த ஆனந்தகுமார் என்பது தெரிய வந்தது. அவர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர் என்பதும் தெரிய வந்தது. மது அருந்தியபோது அவரது நண்பர்கள் யாராவது குடிபோதையில் அடித்துக் கொலை செய்து மலைக்குன்று பகுதியில் வீசிவிட்டுச் சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் மாமல்லபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உறுதியாகும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.