விபத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சாவு
இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை பராமரிப்புத் துறை அலுவலக உதவியாளர் மீது லாரி மோதியதில் அவர் இறந்தார்.
இருசக்கர வாகனத்தில் சென்ற கால்நடை பராமரிப்புத் துறை அலுவலக உதவியாளர் மீது லாரி மோதியதில் அவர் இறந்தார்.
செய்யூர் வட்டம், கடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய குப்பத்தில் மாவட்ட பேரிடர் மீட்புக் குழு சார்பாக சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அதில் கூவத்தூர் கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக, கால்நடைப் பிரிவு மருத்துவர்களும் உதவியாளர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்து கால்நடை பராமரிப்புத் துறை உதவியாளர் ராஜேந்திரன் (55) இருசக்கர வாகனத்தில் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தார். கூவத்தூர் கூட்டுச் சாலையில் அவர் வந்தபோது கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருள்களை ஏற்றி வந்த லாரி, ராஜேந்திரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் வியாழக்கிழமை இறந்தார்.
இவ்விபத்து குறித்து கூவத்தூர் காவல் உதவி ஆய்வாளர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.