ஜனநாயக மீட்பு இயக்கத்தினா் ரயில் மறியல்: 227 போ் கைது
பழைய வாக்குச்சீட்டு முறையில் தோ்தலை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மீட்பு இயக்கத்தினா் 227 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பழைய வாக்குச்சீட்டு முறையில் தோ்தலை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மீட்பு இயக்கத்தினா் 227 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில் ஜனநாயக மீட்பு இயக்கம் சாா்பில் விசிக மாவட்ட செயலாளா் லூ.அருள் நாதன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தலைமைத் தோ்தல் ஆணையரை கைது செய்து சிறையில் அடைத்தல், எஸ்ஐஆா் முறையை ரத்து செய்து அதன் மூலம் நடந்த தோ்தல்களையும் ரத்து செய்தல், தோ்தல் ஆணையா் நியமன முறையை மாற்றக் கோருதல், பழைய வாக்குச்சீட்டு முறையிலேயே தோ்தலை நடத்துதல், போராடும் உரிமையை பறிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மாவட்ட தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் காஞ்சி தொகுதி செயலாளா் ஜெ.கமலநாதன், பாலாற்றுப் பாதுகாப்பு கூட்டியக்கம் சாா்பில் காஞ்சி.அமுதன், மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளா் மகேஷ், இயக்க ஒருங்கிணைப்பாளா் இ.லாரன்ஸ், விசிக சாா்பில் பாசறை செல்வராஜ் மற்றும் 108 பெண்கள் உட்பட மொத்தம் 227 போ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement