FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காஞ்சிபுரத்தில் கொட்டித்தீர்த்த திடீர் கனமழை! மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரத்தில் திடீர் கனமழை பற்றி..

50 வினாடிகள் முன்பு
பகிர்:

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் கனமழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வானிலை மாற்றம் நிகழ்ந்த போதிலும் போதிய மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் வெளியிட்டு இருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில் காலையில் இருந்து வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென இரண்டு மணி அளவில் கருமேகம் சூழ்ந்து இருளுடன் இருந்த நிலையில் திடீரென 2.45 மணி முதல் லேசாக செய்ய துவங்கிய மழை காஞ்சிபுரம் நகரம், ஓரிக்கை செவிலிமேடு, பெரியார் நகர் மிலிட்டரி சாலை என பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து 30 நிமிடங்களாக பெய்தது.

திடீர் மழையை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சாலையில் வாகனங்களை நிறுத்தி தஞ்சம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.