FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காஞ்சிபுரத்தில் 2-வது நாளாக தொடரும் மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருவது பற்றி...

16 அக்டோபர் 2026, 4:05 pm IST
காஞ்சிபுரத்தில் மழை.
பகிர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இதன் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பருவமழை இன்றும் தீவிரமடைந்துள்ளது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகல் 2:30 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மழையின் காரணமாகப் பொதுப் போக்குவரத்து குறைந்துள்ளதுடன், பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது. அவசியத் தேவைகளுக்காக மட்டுமே இருசக்கர வாகன ஓட்டிகள் வெளியே வருவதால், காஞ்சிபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பெய்து வரும் இந்த மழையானது, மாவட்டத்தின் ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகள் நிரம்ப வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விவசாயப் பணிகளுக்கும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் இந்த மழை பெரிதும் உதவும் என்பதால், பொதுமக்களும் விவசாயிகளும் இந்த மழையை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.

summary

With the onset of the Northeast monsoon in Tamil Nadu, heavy rain has been continuously pouring in Kanchipuram district for the second consecutive day today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments