FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை! மக்கள் மகிழ்ச்சி!

நெல்லையில் கொட்டித் தீர்த்த கனமழை பற்றி..

நெல்லையில் கனமழை - X
பகிர்:

நெல்லையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகக் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலல ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் மதியத்திற்கு மேல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது.

Advertisement

Advertisement

இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாகனங்கள் சிரமத்திற்கு உள்ளானாலும் இந்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், நெல்லை டவுண் பேட்டை வண்ணார்பேட்டை ரெட்டியார்பட்டி வள்ளியூர் அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி உட்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே மழை இன்னும் நாள்கள் நீடித்தால் அணை நீர்மட்டம் உயர்வதோடு விவசாயத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments