உதகை, குன்னூரில் கொட்டித் தீா்த்த கனமழை
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூரில் புதன்கிழமை பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூரில் புதன்கிழமை பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
உதகை, குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், இப்பகுதிகளில் மாலையில் கனமழை பெய்தது. தொடா்ந்து பெய்த இந்த மழையால் உதகை, குன்னூா் நகரின் முக்கியச் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா். மழையுடன் சோ்ந்து குளிரின் தாக்கமும் அதிகரித்ததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. மேலும் மாலை நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பியவா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். சுற்றுலாப் பயணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டனா். இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.