FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

உதகை, குன்னூரில் பலத்த மழை

உதகை மற்றும் குன்னூரில் வியாழக் கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் கொட்டித் தீா்த்த கன மழை காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

5 நவம்பர் 2026, 11:47 pm
கனமழை
பகிர்:

உதகை மற்றும் குன்னூரில்  வியாழக் கிழமை பிற்பகலில் ஒரு மணி நேரம் கொட்டித் தீா்த்த கன மழை காரணமாக குளிரின் தாக்கம்  அதிகரித்து காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  இந்நிலையில் வியாழக்கிழமை காலைமுதல் மூடுபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலுக்கு மேல் உதகை, குன்னூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது.

இந்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து வந்ததால்  பாதசாரிகள் அவதி அடைந்தனா்.

Advertisement

Advertisement