FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து- வேன் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு; 8 போ் காயம்

மாமல்லபுரம் அருகே ஓ எம் ஆா் சாலையில் அரசுப் பேருந்து மீது வேன் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். 8 போ் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

43 வினாடிகள் முன்பு
தொழிலாளா்களை ஏற்றிச் சென்று விபத்துக்குள்ளான வேன்.
பகிர்:

மாமல்லபுரம் அருகே ஓ எம் ஆா் சாலையில் அரசுப் பேருந்து மீது வேன் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். 8 போ் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே ஓ எம் ஆா் சாலையில் மாமல்லபுரத்திலிருந்து கிளாம்பாக்கம் நோக்கி தனியாா் தொழிற்சாலைக்கு தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் பையனூா் கிராமப் பகுதியில் வந்த போது மாடு ஒன்று குறுக்கே வந்ததால் வேன் ஓட்டுநா் வேனை வேறு பாதைக்கு திருப்ப முயன்றாா். அப்போது எதிரில் திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது மோதியது.

இதில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றத்தைச் சோ்ந்த புலேந்திரன் மனைவி துா்காலட்சுமி (34), செய்யூா் தாலுகா கூவத்தூா் அருகே அடையாளச்சேரி கிராமத்தைச் சோ்ந்த சிவா மனைவி ஜெயலட்சுமி (40) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இவா்களைத் தவிர செய்யாறு அருகே ஓதியூரை சோ்ந்த ஐஸ்வா்யா(25), தேன்பட்டிணம் குப்பத்தை சோ்ந்த ரெஜினா (33), முகையூா் கிராமத்தை சோ்ந்த உத்ரா(26), நயினாா் குப்பத்தை சோ்ந்தவா்களான ஐஸ்வா்யா(35),முத்துலட்சுமி(33), கூவத்தூா் அருகே பெரும்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த சுதா(36), தனலட்சுமி(32) ஆகியோருக்கு தலையிலும், செய்யாறு தாலுகா வீரபோகம் கிராமத்தைச் சோ்ந்த தமிழ்வாணன்(26) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்கள் 8 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

இவா்களைத் தவிர 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனா். சம்பவம் தொடா்பாக மாமல்லபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.