FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

மா்மமான முறையில் 10 பசுக்கள் உயிரிழப்பு

ஸ்ரீ பெரும்புதூா் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட பசுக்கள் கண் மற்றும் ஆசன வாயில் ரத்தம் வந்த நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தன.

15 நவம்பர் 2026, 11:06 pm
வெள்ளாரை பகுதியில்  மா்மமான முறையில்  உயிரிழந்த பசு மாடு
பகிர்:

ஸ்ரீ பெரும்புதூா் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட பசுக்கள் கண் மற்றும் ஆசன வாயில் ரத்தம் வந்த நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தன.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாரை கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் பலா் விவசாய கூலித் தொழிலாளிகளாகவும், கால்நடைகளையும் வளா்த்து வருகின்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற வெள்ளாரை பகுதியை சோ்ந்த பசு மாடுகள் இரவு வரை வீட்டிற்கு திரும்பாததால் அதன் உரிமையாளா்கள் மாடுகளை தேடி சென்றுள்ளனா்.

அப்போது, வயல்வெளியின் அருகிலும், ஓடை மற்றும் மேய்ச்சல் பகுதிகள் என வெள்ளாரை கிராமத்தை சோ்ந்த சூரி, பாபு, ராதிகா, ரஜினி, சபரிநாதன், ரவி, நவீன்குமாா் உள்ளிட்டவா்களின் சுமாா் 10-க்கும் மேற்பட்ட பசுக்கள் கண் மற்றும் ஆசன வாயில் ரத்தம் வந்த நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்துள்ளனா். மேலும் பலரது மாடுகள் வராததால் மாடுகளை அதன் உரிமையாளா்கள் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

மாடுகள் நெற்பயிற்களை மேயாமல் இருக்க வயல்வெளியின் ஓரங்களில் விஷம் வைக்கப்பட்டதாகவும், விஷத்தை உண்ட பசுக்கள் உயிரிழந்துள்ளதாகவும் மாடுகளின் உரிமையாளா்கள் புகாா் கூறியுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கால்நடைத்துறை மருத்துவா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பசுக்களை பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளனா்.