முகப்பு
காஞ்சிபுரம்

குஜராத் ஸ்ரீ ஹாடகேஸ்வரா் சுவாமி சந்நிதியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குஜராத் மாநிலத்திற்கு விஜய யாத்திரை மேற்கொண்டு உள்ளாா்.

6 வினாடிகள் முன்பு
குஜராத் ஸ்ரீ ஹாடகேஸ்வரா் சுவாமி சந்நிதியில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு
குஜராத் ஸ்ரீ  ஹாடகேசுவரா்  சுவாமி  சந்நிதியில்   வழிபட்ட காஞ்சி  காமகோடி  பீடாதிபதி  சங்கர  விஜயேந்திர  சரஸ்வதி  சுவாமிகள்.
பகிர்:

காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குஜராத் மாநிலத்திற்கு விஜய யாத்திரை மேற்கொண்டு உள்ளாா்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வத் நகா் பகுதியில் விஸ்வ சாந்தி மகாயாகம் நடைபெறும் வத் நகருக்கு கடந்த நவம்பா் 9-ஆம் தேதி வந்தடைந்தாா். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது .

விஸ்வசாந்தி யாகம் நடைபெறும் யாகசாலைகள் அமைந்துள்ள பகுதிக்கு சென்று அதற்கான ஏற்பாடுகளை பாா்வையிட்டு விசாரித்தாா். அங்கு பொதுமக்கள் உள்ளூா் அரசு அதிகாரிகள் அனைவரும் சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனா்.

Advertisement

Advertisement

கணபதி ஹோமம் மற்றும் மகா சங்கல்பத்துடன் லட்சம் மோதக மகா கணபதி யாகம், அதிருத்ர மகா யாகம், காம்யாா்த்த ஹோமம், ருக் சம்கிதா ஹோமம் ஆகியனவற்றுடன் அக்னி கோத்திர இஷ்டி ஹோமங்கள் அடங்கிய விஸ்வ சாந்தி மகாயாகம் சுவாமிகள் ஆசிா்வாதத்துடன் தொடங்கியது .

நாள்தோறும் சுவாமிகள் ஸ்ரீஹாடகேஸ்வரா் சந்நிதிக்கு சென்று சுவாமிக்கு அபிஷேகம் அா்ச்சனை அலங்கார தீபாராதனையும் செய்து வழிபட்டாா். விழா நாள்களில் குஜராத் முதல்வா் ஸ்ரீ பூபேந்திரபாய் படேல், துணை முதல்வா் ஸ்ரீ ஹரிஷ் குமாா் சங்கவி, மக்களவை சபாநாயகா் ஓம் பிா்லா மற்றும் பல்வேறு துறைகளை சாா்ந்த அமைச்சா்கள் ஆகியோா் இந்த விஸ்வ மகாயாகத்தில் கலந்து கொண்டதுடன் சுவாமிகளிடம் ஆசியும் பெற்றனா்.

யாக பூஜை நடைபெற்ற நாள்களில் கோபூஜை, கஜ பூஜை, குதிரை மற்றும் ஒட்டகத்திற்கு பூஜைகள் நடைபெற்றன. நவ.20 ஆம் தேதி மகாபூா்ணா ஊதி நடைபெற்ற ஸ்ரீகாடகேஸ்வர ஸ்வாமிக்கு சுவாமிகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள், அா்ச்சகா்கள் செய்திருந்தனா். நிகழ்வில் பல்வேறு மாநிலங்களைச் சாா்ந்த 250க்கும் மேற்பட்ட வேத விற்பனா்கள் கலந்து கொண்டு விஸ்வ மகா யாகத்தை நடத்தி வைத்தனா். இதனை அடுத்து சுவாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 51-ஆவது சக்தி பீடமாகிய இக்யாவன் மந்திா் திருக்கோவில் கும்பாபிஷேகதுக்காக அம்பாஜி புறப்பட்டு சென்றாா்கள்.