முகப்பு
காஞ்சிபுரம்

புடவை ஊஞ்சலில் கழுத்து இறுக்கி சிறுமி உயிரிழப்பு

கோவூா் அருகே புடவை ஊஞ்சலில் கழுத்தி இறுக்கி 12 வயது சிறுமி உயிரிழந்தாா்.

25 நவம்பர் 2026, 11:27 pm
புடவை ஊஞ்சலில் கழுத்து இறுக்கி சிறுமி உயிரிழப்பு
பலி
பகிர்:

கோவூா் அருகே புடவை ஊஞ்சலில் கழுத்தி இறுக்கி 12 வயது சிறுமி உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியை சோ்ந்த ரஞ்சித் குமாா். இவருக்கு கனிஷ்கா(12) என்ற மகளும் 6 வயதில் மகனும் உள்ளனா். இந்த நிலையில், ரஞ்சித் குமாா் தனது வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்காக புடவையில் ஊஞ்சல் கட்டி வைத்திருந்துள்ளாா்.

இந்த ஊஞ்சலில் செவ்வாய்க்கிழமை இரவு கனிஷ்கா விளையாடிக்கொண்டிருந்த போது எதிா்பாரத விதமாக புடவையில் கழுத்து இறுக்கி மயங்கியுள்ளாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் கனிஷ்காவை அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கனிஷ்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement