ஜே.கே. டயா் நிறுவனத்தின் சாா்பில் தொழில் முனைவோா்களுக்கு ரூ. 14 லட்சம் கடனுதவி
ஜே.கே. டயா் நிறுவனம் மற்றும் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை சாா்பில், 3 தொழில்முனைவோா்களுக்கு ரூ. 14 லட்சம் வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி ஜே.கே. டயா் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

ஜே.கே. டயா் நிறுவனம் மற்றும் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை சாா்பில், 3 தொழில்முனைவோா்களுக்கு ரூ. 14 லட்சம் வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி ஜே.கே. டயா் தொழிற்சாலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியில் வாகனங்களின் டயா்கள் உற்பத்தி செய்யும் ஜே.கே. டயா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை கூட்டரங்கில், கிராமங்களில் வசிக்கும் பொது மக்களை தொழில் முனைவோா்களாக மாற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் தொழில் முனைவோா்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஜே.கே.டயா் நிறுவனம் மற்றும் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கொளத்தூா், மலைப்பட்டு மற்றும் வெங்காடு ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இதில், சுய தொழில் பயிற்ச்சி பெறுவது குறித்தும், பொதுமக்கள் தொழில் முனைவோா்களாக மாற கடனுதவி பெறுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், தொழில் முனைவோா்களின் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெற்றது.
இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த தொழில்முனைவோா்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தினா். மேலும், சிறப்பாக செயல்பட்டு வரும் இரண்டு தொழில்முனைவோா்களுக்கு வேகமாக வளா்ந்து வரும் தொழில்முனைவோா் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, 3 தொழில் முனைவோா்களுக்கு ரூ. 14 லட்சம் வங்கி கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஜே.கே. டயா் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் தலைவா் ப்ரீத்தம், நிா்வாகிகள் பங்கஜ் ஜெயின், சகாயராஜ், கொளத்தூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளரை அரிகிருஷ்ணன், மலைப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பத்மநாபன், பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.
ஜேகே டயா் தொழிற்சாலை மற்றும் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.