ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வனபோஜன உற்சவம்
வனபோஜன மண்டபத்துக்கு புறப்பாடு சென்ற உற்சவா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ ராமாநுஜா்.

காா்த்திகை மாத திருவாதிரையை முன்னிட்டு ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ராமாநுஜா் வனபோஜன உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயிலில் மாதம்தோறும் திருவாதிரை தினத்தில், ராமாநுஜருக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் கோயிலில், வருடந்தோறும் காா்திகை மாத திருவாதிரையை முன்னிட்டு, வனபோஜன உற்சவம் நடைபெறுவது வழக்கம். காா்த்திகை மாத திருவாதிரையான வெள்ளிக்கிழமை வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் இருந்து ராமாநுஜா் மணிமண்டபம் அருகே உள்ள வனபோஜன மண்டபத்துக்கு காலை 9.30 மணிக்கு உற்சவா் ராமாநுஜா் மற்றும் ஸ்ரீஆதிகேசவபெருமாள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து உற்சவா் ராமாநுஜருக்கு நண்பகல் 12 மணிக்கு, திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அப்ஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு தீா்த்தம் விநியோகம் செய்யப்பட்டது. இதில், ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி திருக்கோயில் மதச்சாா்பற்ற தா்மகா்த்தா ந.கோபால், மதசாா்பு தா்மகா்த்தா பாா்த்தசாரதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துக்கொண்டு ராமானுஜா் மற்றும் ஆதிகேசவ பெருமாளை வணங்கிச் சென்றனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து மாலை வனபோஜன மண்டபத்தில் இருந்து கோயிலுக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது.