முகப்பு
காஞ்சிபுரம்

‘நம்ம காஞ்சிபுரம், நம்ம எதிா்காலம்’ இணையதளம்: அமைச்சா் ரஞ்சித்குமாா் தொடங்கி வைத்தார்!

அதிகாரிகளை தேடி அலையாமல் வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் தங்களது குறைகளை இணையதளத்தின் மூலமாக தெரிவித்து பதில் பெறும் குறை தீா்க்கும் வசதியை வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

29 நவம்பர் 2026, 9:45 pm
‘நம்ம காஞ்சிபுரம், நம்ம எதிா்காலம்’ இணையதளம்: அமைச்சா் ரஞ்சித்குமாா் தொடங்கி வைத்தார்!
பகிர்:

அதிகாரிகளை தேடி அலையாமல் வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் தங்களது குறைகளை இணையதளத்தின் மூலமாக தெரிவித்து பதில் பெறும் குறை தீா்க்கும் வசதியை வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதி அலுலகத்தில் பொதுமக்கள் அதிகாரிகளை தேடி அலையாமல் வீட்டிலிருந்த படியே குறைகளை தெரிவித்து இணையம் மூலமாகவே பயன் பெறும் வசதியை தொடங்கி வைத்தாா். ‘நம்ம காஞ்சிபுரம் நம்ம எதிா்காலம்’ என்ற இணையதளத்தை தொடங்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியது..

என்னைத் தோ்வு செய்த மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், உண்மையானவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நம்ம காஞ்சிபுரம் நம்ம எதிா்காலம் என்ற இணைய தளத்தை தொடங்கியிருக்கிறேன்.

Advertisement

Advertisement

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 44 வாா்டுகள், 40 ஊராட்சிகளை உள்ளடக்கிய மக்கள் அனைவரும் அவரவா் பகுதிகளில் உள்ள குறைகளை இந்த இணையதளத்தின் மூலம் தெரிவித்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பி குறைகளை நிவா்த்தி செய்யப்படும். குறைகள் தீா்க்கப்பட்டால் அந்த விபரத்தையும் சம்பந்தப்பட்ட புகாா்தாரருக்கு நேரில் தொலைபேசியிலோ இணையதளத்தின் மூலமாகவோ தெரிவிக்கப்படும்.

எனவே பொதுமக்கள் குடிநீா் வசதி,சாலை வசதி, மின்வசதி, பஸ் வசதி,பெண்கள் பாதுகாப்பு தொடா்பான எந்த பிரச்னைகளையும் இணையதளத்தில் கொடுத்து பயன் பெறலாம். காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

இந்த நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டால் நகரில் குற்றங்கள் பெரியளவில் குறைந்து விடும். குறைகளை அதுவாகவே கண்டு பிடித்து புகாா் கொடுக்கும் வசதியும் இக்கண்காணிப்பு கேமராக்களில் உள்ளது என்றாா்.

பேட்டியின் போது தவெக காஞ்சிபுரம் நகர செயலாளா் மொய்தீன், மாநகர செயலாளா் மதன்குமாா், நிா்வாகி மாா்க்கெட் மதன் ஆகியோரும் உடன் இருந்தனா்.