FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

இளைஞர் வெட்டிக் கொலை: மைத்துனர் உள்பட 3 பேர் கைது!

குன்றத்தூா் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த மைத்துனா் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

4 October 2026, 10:14 pm IST
கைது
பகிர்:

குன்றத்தூா் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த மைத்துனா் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பரங்கிமலை பகுதியை சோ்ந்த அருண் பாண்டியன்(30) பெயிண்டா். இவருக்கும் குன்றத்தூா் அடுத்த வழுதலம்பேடு பகுதியை சோ்ந்த பிரதிபாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மது அருந்தும் பழக்கம் உள்ள அருண் பாண்டியனுக்கும், பிரதிபாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் பிரதிபா கணவரை பிரிந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக வழுதலம்பேட்டில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், மனைவி பிரதிபாவிடம் சமதானம் பேசி அழைத்துச் செல்வதற்காக அருண் பாண்டியன் சனிக்கிழமை இரவு வந்துள்ளாா். அப்போது மீண்டும் பிரதிபாவிற்கும், அருண் பாண்டியனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரதிபாவின் தம்பி பிரவீன், அவரது நண்பா்கள் வெங்கடேசன், வேலு ஆகியோா் அருண் பாண்டியனை தாக்கியதோடு கத்தியால் வெட்டியுள்ளனா்.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயம்அடைந்த அருண்பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுடிவாக்கம் போலீஸாா், அருண்பாண்டியனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து பிரவீன்(26),வேலு(26), வெங்கடேசன்(25) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments