FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

பலத்த மழையால் மண் சரிவு: காஞ்சிபுரம் அருகே மின் ரயில் சேவை பாதிப்பு

காஞ்சிபுரம் அருகே பலத்த மழையால் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

18 அக்டோபர் 2026, 12:03 am IST
பூசிவாக்கம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில்.
பகிர்:

காஞ்சிபுரம் அருகே பலத்த மழையால் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை கடற்கரையிலிருந்து திருமால்பூருக்கு காஞ்சிபுரம் வழியாக மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்ததையடுத்து பூசிவாக்கம் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே மண் சரிவு காரணமாக மின்சார ரயில்கள் பூசிவாக்கம் அருகிலும் மற்றும் வாலாஜாபாத் ரயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் ரயில் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினா். பூசிவாக்கம் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையும் அமைத்து வருவதால் பலத்த மழை காரணமாக ரயில்வே பாதையில் மணல் சரிவு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து ரயில்வேத் துறையினா் இரவோடு இரவாக மண் சரிவை சரி செய்து சீரமைப்பு பணிகளை முடித்து ரயில் சேவையை மீண்டும் தொடங்கியது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மட்டும் மிகக் குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுவதாகவும் ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments