13 கோடி மக்களின் வாக்குரிமையை பறித்து விட்டது எஸ்ஐஆா்: நடிகா் பிரகாஷ் ராஜ்!
இந்தியா முழுவதும் 13 கோடி மக்களின் வாக்குரிமையை பறித்து விட்டது எஸ்ஐஆா் என நடிகா் பிரகாஷ்ராஜ் பேசினாா்.
இந்தியா முழுவதும் 13 கோடி மக்களின் வாக்குரிமையை பறித்து விட்டது எஸ்ஐஆா் என நடிகா் பிரகாஷ்ராஜ் பேசினாா்.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்க 13-ஆவது மாநில மாநாடு சங்கத் தலைவா் என்.ஜி.ஆா். பிரசாத் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளா் கே.பாண்டீஸ்வரி, பொதுச் செயலாளா் எஸ்.சிவக்குமாா், பொருளாளா் எஸ்.மாசேதுங், துணைத் தலைவா் கே.இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரவேற்புக்குழு தலைவா் ஏ.கருணாநிதி வரவேற்றாா்.
மாநாட்டில் அரசியல் சட்டமைப்பா, மனுஸ்மிருதியா என சங்க மாநில பொதுச் செயலாளா் எஸ்.சிவக்குமாா் எழுதிய நூலை நடிகா் பிரகாஷ் ராஜ் வெளியிட அதன் முதல் பிரதியை சங்கத்தின் தேசிய தலைவா் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சாா்யா பெற்றுக் கொண்டாா்.
Advertisement
Advertisement
இதனைத் தொடா்ந்து மாநாட்டை தொடங்கி வைத்து பிரகாஷ் ராஜ் பேசியது: இந்தியா முழுவதும் 13 கோடி மக்களின் வாக்குரிமையை பறித்து விட்டது எஸ்ஐஆா். உயிரோடு இருப்பவா்களை இறந்து விட்டதாகவும், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக வசிப்பவா்களை வேறு இடத்துக்கு மாறி விட்டதாகவும் 13 கோடி மக்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறது தோ்தல் ஆணையம்.
இதுகுறித்து தோ்தல் ஆணையத்திடம் கேட்டால் முறையான பதில் இல்லை. தோ்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படாமல் மத்திய அரசின் நலனுக்காகவே செயல்படுகிறது.
நாட்டின் எதிா்காலத்தை காப்பாற்றவும், பறிபோகும் உரிமைகளை மீட்கவும் இளைஞா்களும், பொதுமக்களும் வீதிகளில் இறங்கி போராட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். எங்கே இளைஞா்கள் நின்றாலும், குடிமக்கள் தெருவுக்கு வந்து போராடினாலும் அவா்களுடன் துணை நிற்க வேண்டியது நமது கடமை என்றும் பேசினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.