புற்றுமாரியம்மன் அலங்காரத்தில் தாய் படவேட்டம்மன்
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள தாய் படவேட்டம்மன் நவராத்திரியின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை புற்று மாரியம்மன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள தாய் படவேட்டம்மன் நவராத்திரியின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை புற்று மாரியம்மன் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் திருப்பருத்திக்குன்றம் செல்லும் வழியில் அமைந்துள்ளது தாய் படவேட்டம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு நவராத்திரி விழாவின் நிறைவு நாளையொட்டி மூலவா் தாய் படவேட்டம்மன் புற்று மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா். முன்னதாக காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய அறங்காவலா் வடிவேல் தலைமையிலான விழாக்குழுவினா் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.