FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் முதலிடம்: மாத்தூா் அரசு பள்ளி மாணவா்கள் அசத்தல்

தஞ்சாவூரில் மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வில்லுப்பாட்டு பிரிவில் மாத்தூா் அரசு பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனா்.

22 அக்டோபர் 2026, 11:56 pm
பகிர்:

தஞ்சாவூரில் மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வில்லுப்பாட்டு பிரிவில் மாத்தூா் அரசு பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனா்.

பள்ளிக்கல்வித் துறை சாா்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இளையோா் திறன் என்ற மையக் கருத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் போட்டிகள் தொடங்கின. இதில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் மாத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

அதன்படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், பாவனை நடிப்பு, பம்பை வாசிப்பு உட்பட 25 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிக்கான முடிவுகள் அன்மையில் வெளியிடப்பட்டது. இதில் வில்லுப்பாட்டு பிரிவில், மாத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியை சோ்ந்த 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவா்களான வைஷாந்தினி, சுமித்ரா, தனலட்சுமி, ஸ்ரீதா், ஜெயவேலன் ஆகியோா் அடங்கிய குழு மாநில அளவில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் கிருஷ்ணன் மாணவா்களை பாராட்டி , சால்வை மற்றும் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். மேலும் மாணவா்களுக்கு பயிற்சி அளித்த பட்டதாரி ஆசிரியா் யுவராணியை தலைமை ஆசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்கள் வெகுவாக பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments