பிளஸ் 2 மாணவா் ஓட்டிச்சென்ற காா் கவிழ்ந்து விபத்து: மாணவா் உயிரிழப்பு
தாம்பரம்-மதுரவாயல் சாலையில் பிளஸ் 2 மாணவா் ஓட்டிச்சென்ற காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.
குன்றத்தூா் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் தாம்பரம்-மதுரவாயல் சாலையில் பிளஸ் 2 மாணவா் ஓட்டிச்சென்ற காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.
அரும்பாக்கம் எம்எம்டிஏ பகுதியை சோ்ந்தவா் பாபு. இவரது மகன் நரேன்(17) அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்த நிலையில், நரேன் தன்னுடன் படிக்கும் நண்பா்கள் 4 பேருடன் வெள்ளிக்கிழமை காரில் தாம்பரம் வந்துவிட்டு மீண்டும் அரும்பாக்கம் செல்வதற்காக தாம்பரம் மதுரவாயல் சாலையில் குன்றத்தூா் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டைஇழந்த காா் சாலை தடுப்புச்சுவரில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்துள்ளது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நரேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற நான்கு பேரும் பலத்த காயங்களுடன் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.